கீர்த்தி சுரேஷ் – அனிருத் காதலா?

கீர்த்தி சுரேஷ் – அனிருத் காதலா?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் காதலிப்பதாக வெளியான செய்தி சினிமா வட்டாரங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாக்களிலும் கொடிகட்டி பறந்து வருகிறார் அவருக்கு ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகம். அதேபோன்று அனிருத் அவர்களுக்கும் அவரது இசையின் காரணமாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சைவத்தில் இவ்விருவரும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ்க்கு இடையில் ஏதோ காதல் இருப்பதாக பதவி ஒன்றை பரப்பினர்.

இது சினிமா வட்டாரங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு குறிப்பாக ரஜினியின் அண்ணாத்த போன்ற படங்களில் பிஸியாக வேலை செய்து கொண்டு வருகிறார். அதேசமயம் அனிருத் அவர்களும் நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு பிஸியாக மியூசிக் டைரக்சன் செய்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் இது முற்றிலும் ஒரு வதந்தி என்று கீர்த்திசுரேஷ் தரப்பு கூறியுள்ளது மேலும் இதுபோன்ற வதந்திகளை நம்பவும் வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.