அரசு ரத்து செய்த ஆரியர் exam அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது!

அரசு ரத்து செய்த ஆரியர் exam அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது!

பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. மேலும் அதேசமயத்தில் அரசு 10th மற்றும் பிற வகுப்பு மாணவர்களின் இறுதி தேர்வுகளையும் ரத்து செய்தது. பின்னர் கல்லூரி மாணவர்களின் கடைசி செமஸ்ட்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என UGC தெரிவித்திருந்தது. பின்னர் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் அரியர் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கினார். அத்துடன் அரியர் தேர்வு அட்டவணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.