சென்னை அணியின் திட்டம் இதுதான்

சென்னை அணியின் திட்டம் இதுதான்

சாம்பியன் அணியாக திகழ்ந்து வரும் சென்னை அணி. கடந்தாண்டு நடந்த தொடரில் தகுதிச் சுற்றுக்கே போகாமல் வெளியேறியது. பல சீனியர் வீரர்கள் இருந்தாலும் சிறப்பாக செயல்படாததால் அணி தோற்றதாக விமர்சிக்கப்பட்டது. வழக்கமாக சீனியர் வீரர்களை குறி வைக்கும் சென்னை அணி தற்பொழுது இளம் வீரர்களை குறிவைத்து வருகிறது. இந்நிலையில் 2 இளம் வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் அணியில் திட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

முன்னதாக சென்னை அணியில் இருந்து பல சீனியர் வீரர்களான கேதர் ஜாதவ், வாட்சன், பியூஷ், சாவ்லா, முரளி விஜய், மோனு சிங், ஹர்பஜன் சிங் போன்றோர் விலக்கப்பட்டதால் ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் 7 உள்நாட்டு வீரர்களை சென்னை அணி ஏலம் எடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இங்கிலாந்து வீரர் மொயின் அலியை ரூ.7 கோடி ரூபாய்க்கும் அடுத்து கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கும் மற்றும் இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாராவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சென்னை அணி நேற்று ஏலம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஏலத்தில் கலந்துகொண்ட சென்னை அணி ஒரு கலவையான வீரர்களை தேர்வு செய்து வருகிறது. ஹரிசங்கர் ரெட்டி, பகத் வர்மா ஆகிய இரு இளம் வீரர்களை சென்னை சார்பில் தலா 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர். முஷ்டாக் கோப்பையில் கலக்கிய வலது கை பவுலர் ஹரி சங்கர் ரெட்டி மற்றும் பகத் வர்மா வலது கை ஆப் ஸ்பின் பவுலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.