பால் குடிச்சா இவ்வளவு நன்மைகளா? அடேங்கப்பா!

பால் குடிச்சா இவ்வளவு நன்மைகளா? அடேங்கப்பா!

பண்டைய காலங்களில் இருந்து பால் மனித வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. ஏன் புனிதமாக பார்க்கப்படும் தாய்மைக்கு அடையாளமே பால் தான்.

பால் சாப்பிடுவதால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. ஆனால் இது தெரியாமல் பலரும் அதைத் தவிர்த்து வருகின்றனர். டீ காபி போன்றவற்றை தவிர்த்து விட்டு தினமும் பால் குடிப்பதால் உடலில் பல்வேறு நல்ல விஷயங்கள் நடக்கிறது.

உடலின் ஆரோக்கியத்திற்கும் வலிமைக்கும் பால் பெரிய அளவில் பங்காற்றுகிறது என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் ஆல் இன் ஆல் உடலில் நன்மை மட்டும் தான் ஏற்படுகிறதா என்றால் இல்லை. பால் குடிப்பதால் சில தீமைகளும் ஏற்படுகிறது.

பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

தினசரி காலையில் ஒரு டம்ளர் சூடான பால் குடிப்பதால் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலிமை கொடுக்கும் ஊட்டசத்தாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் கீல்வாத நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைக்கிறேன் என இருக்கும் இளைஞர் கூட்டத்திற்கு ஒரு சின்ன அறிவுரை. தினமும் காலையில் சூடான பால் குடித்தாலே உடல் எடை குறைய வாய்ப்பு இருக்கிறது.

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் வேளையிலும் அதை சரி செய்ய பால் பெரிய அளவில் உதவி செய்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. மன அழுத்த காலகட்டங்களில் தினமும் காலையில் சூடான பால் உட்கொள்வதால் மன அழுத்தத்தை நீக்கி உற்சாகமாக வைக்கிறது.

பெண்களுக்கு தங்களுடைய முகத்தை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். இதனால் தினமும் இரவு தூங்கும் போது ஒரு டம்ளர் பால் குடித்தால் முகப்பொலிவு ஏற்படுமாம்.

அதேபோல் பெண்கள் மாதவிடாய் காலகட்டத்தில் உடல் சோர்ந்து காணப்படுவார்கள். மேலும் மாதவிடாய் சமயத்தில் அவர்களுடைய உடலில் சத்து என்பதே இருக்காது. அந்த நேரத்தில் தினமும் காலையில் பால் உட்கொண்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

அதே போல் செரிமான பிரச்சனை தூக்கமின்மை போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கும் பால் பெரிய அளவு தீர்வுகளை கொடுத்து வருகிறது.

பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும் போதும் உணவு சார்ந்த விஷயங்களை எடுத்துக் கொள்ளும்போதும் நினைவில் கொள்வது நல்லது.

எந்த உணவுமே அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் ஆபத்துதான். அதைப்போல் தான் தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு பால் மட்டுமே பருக வேண்டும். அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் இருதய நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறது மருத்துவ குழு.