February 25-ம் தேதி முதல் பேருந்து சேவை இல்லை

February 25-ம் தேதி முதல் பேருந்து சேவை இல்லை

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வரும் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். 14வது ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பலமுற அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். இதன் பெயரில் கடந்த வாரத்தில் குரோம்பேட்டையில் போக்குவரத்து கழகங்களுடன் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேசுவார்த்தை பலனளிக்காததால் போக்குவரத்துக்கு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் தொ மு ச, சி ஐ டி யு, ஏ.ஐ டி யு சி, உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து துறையில் பணியாற்றக்கூடிய 95 சதவீத தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தால் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளவர் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் பெருமளவு மக்க பாதிக்கப்படுவர், அத்துடன் பெருத்த நஷ்டமும் அரசுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.