Cook with Comali புகழின் தற்போதைய நிலை

Cook with Comali புகழின் தற்போதைய நிலை

விஜய் TV’யில் ஒளிபரப்பாகும் cook with comali நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து சிறந்த காமெடி குக்கிங் நிகழ்ச்சியாக வளம் வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிக்கும் பலருக்கும் அவர்களது திறமைக்கு ஏற்றவாறு அவ்வப்போது படவாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது.

pugal

மேலும், குறிப்பாக அஸ்வின், ஷிவாங்கி, புகழ் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு சமூகவலைத்தளங்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் நட்சத்திர போட்டியாளர் புகழ் அவர்களுக்கு படவாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளது.

தற்போதும் சில படங்களில் நடித்து வரும் புகழ் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை படக்குழு தங்களது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.