தென்னகத்தில் டெஸ்ட் மேட்ச் ஆடும் கொரோனா

தென்னகத்தில் டெஸ்ட் மேட்ச் ஆடும் கொரோனா

கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ளதாக சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது, கேரளாவில் நேற்று மட்டும் சுமார் 4,070 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு நேற்று சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 58000’க்கும் மேற்பட்டோர் தற்போது அங்கு கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,71,975 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம் போன்ற பகுதிகளில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சுகாதார துறை கூறுகையில், கேரளாவில் தொற்றுக்கான முன்னெச்சரிக்கையை சரியாக எடுக்காததே இத்தகைய காரணம் என்று கூறியுள்ளது.

அதே சமயம் தென் மாநிலங்களில் உருமாறிய கொரோனா மிகவும் வேகமாக பரவுகிறது என்ற செய்தியும் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை கிளப்பியுள்ளது.