கேப்டன் கூல் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படம்

கேப்டன் கூல் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படம்

கேப்டன் கூல் என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்க படுபவர் தான் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. இன்னும் சொல்லப்போனால் இவரை பிடிக்காதவர் என எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி ரசிகர்களை தன்வசம் கவர்ந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பையை வென்று குடுத்ததில் இவரது பங்கு அதிகம். இவரின் வாழ்கை வரலாறு திரை படமாக எடுக்க பட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருடம் திடீரென தனது ஓய்வு பற்றிய பதிவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தினார் நமது கேப்டன் தோனி.

நாளைய தினத்தில் பிறந்தநாள் கொண்டாட விருக்கும் தோனி அவர்கள் கடந்த ஜூலை நான்காம் தேதி தனது 11வது திருமண நாளை கொண்டாடினார். அப்போது தனது ஆசை மனைவி ஷாக்ஷிக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தோனியின் மனைவி.

தோனி மற்றும் சாக்ஷி தம்பதியினருக்கு ஷிவா எனும் இரண்டு வயது குழந்தை இருப்பது அனைவரும் அறிந்ததே அவரின் சுட்டி தனமான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி இணையதளத்தை அழகாக்குவது குறிப்பிடத்தக்கது. நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் தோனிக்கு நியூஸ் நூடுல்ஸ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.