தொடரும் தற்கொலை சோகத்தில் தோனி படக்குழுவினர்

தொடரும் தற்கொலை சோகத்தில் தோனி படக்குழுவினர்

தோனியில் வாழ்க்கை வரலாறு ஒரு பிரம்மாண்டமான படமாக எடுக்கப்பட்டது. அதில் நடிகர் சுஷாந்த் சிங் நடித்து இருந்தார். மேலும் இப்படத்திற்கு பின் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. அத்துடன் அவருக்கு அதிக படவாய்ப்புகளும் வர தொடங்கின.

இந்நிலையில் சமீபத்தில் அவரது தற்கொலை சம்பவம் பெரிய அதிர்வலைகளை நாடு முழுவது ஏற்படுத்தியது. அத்துடன் அவரது காதலியிடம் விசாரணை நடத்தியது, மற்றும் போதை பொருள் குறித்த சர்ச்சையான விஷயங்கள் வெளியானது போன்ற அதிர்ச்சிகரமான பல சம்பவங்கள் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தோனியில் வாழ்க்கை வரலாற்றில் நடித்தவரும் சுஷாந்த் அவர்களின் நல்ல நண்பருமான அவரது உடன் நடிகர் சந்தீப் நஹார் செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இப்படத்தில் சுஷாந்திற்கு நண்பராக நடித்திருப்பார்.

மனைவியுடன் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இதனால் தான் தான் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கோரியுள்ளார்.

மேலும் இது குறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.