உலக சாதனை புரிந்த தோனி

உலக சாதனை புரிந்த தோனி

தோனி என்றாலே நாம் அனைவருக்கும் நியாபகம் வருவது அவரது அசத்தலான சாதனையே, அவரது பல சாதனைகள் உலக அளவில் பல கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக அவரது ஹெலிகாப்டர் ஷாட் யாராலும் மறக்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

IPL போட்டிகளில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவரது ஆட்டத்தை காண பல லட்சக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர். தற்போது 2021 ஆண்டின் IPL போட்டியை வென்று, தோனி தலைமையிலான CSK அணி சாதனை படைத்துள்ளது. அது ஒரு பக்கமிருக்கு,தல தோனி அவர்கள், சத்தமே இல்லாமல் மேலும் ஒரு உலக சாதனையை புரிந்துள்ளார். 300 T20 போட்டியில் கேப்டனாக விளையாடி, இதுவரை உலகில் வேறு எந்த வீரரும் செய்திராத சாதனையை தோனி புரிந்துள்ளார்.

தோனியின் இந்த சாதனையை தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.