தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?

தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?

எப்போதுமே அக்டோபர் இரண்டாம் வெள்ளிக்கிழமை முட்டை தினம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இங்கு சில பேர் வெள்ளிக்கிழமை என்றாலே சைவப் பிரியர்கள் நாள் என ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளனர். ஆனால் உலகம் முழுவதும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை தான் முட்டை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சரி முட்டை ஏன் அவ்வளவு ஸ்பெஷல்? எதற்கு தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்?

முட்டையில் கிட்டத்தட்ட பதினெட்டு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. கோலின் ஜிஆக்ஸ் ஆண்டின் என்ற நுண்ணூட்ட சத்துக்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. அது உன் முட்டையின் வெள்ளைக்கரு ரொம்பவே ஸ்பெஷல். யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு அதில் ஏகப்பட்ட சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளன.

முட்டையின் வெள்ளைக் கரு எந்தெந்த நோய்களை குணப்படுத்தும்?

நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு அதிலிருந்து மீண்டுவர பெரிதும் உதவுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் கொலஸ்ட்ரால் இல்லை. அதேபோல் கலோரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

இவ்வளவு ஏன், கர்ப்பிணி பெண்களுக்கு முட்டை கொடுப்பதனால் அவர்களது புரதச் சத்தை அதிகரித்து சோர்வடைய வைக்காமல் தடுத்து வருகிறது. ஒரு வெள்ளைக் கரு நான்கு புரதச்சத்துக்கு சமம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இன்னும் முக்கியமாக குறைமாதப் பிரசவம் நடைபெறாமல் இது தடுக்கிறது.

மேலும் காலையில் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு சாப்பிட நேரம் இருப்பதில்லை. அதற்கு பதிலாக ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதுமானது. மதிய உணவு வரை அது தாராளமாக தாக்குப்பிடிக்கும், அதுமட்டுமில்லாமல் புரதச்சத்தும் நிறைந்தது.

அதனைத் தொடர்ந்து கண்புரை, ஒற்றைத் தலைவலி, நரம்பு பிரச்சனைகள், மூளை செயல்பாட்டை அதிகரிப்பது, உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகளை அகற்றுவது என ஒரு முட்டை மனிதனின் உடலில் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை முட்டையின் தன்மையைப் பற்றி அறியாதவர்கள் இன்றிலிருந்து குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முட்டையை எடுத்து தங்களது உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.