கால் கருப்பா இருக்குன்னு கவலையா? இதோ வெள்ளையாக்க சிறந்த வழி முறைகள்

கால் கருப்பா இருக்குன்னு கவலையா? இதோ வெள்ளையாக்க சிறந்த வழி முறைகள்

நம் உடம்பில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நான் காலை மட்டும் ஏதோ கடமைக்கு வைத்திருப்பது போல் பயன்படுத்துகிறோம். காலில் என்றாவது அடி பட்டால் மட்டுமே அதைப் பற்றிய கவலை நமக்கு. மற்றபடி அதுவே நமக்கு ஒரு மெஷின் போல தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி மெஷினாக இருந்தாலும் அவ்வப்போது ஆயில் சர்வீஸ் செய்தால்தானே நன்றாக இருக்கும். அந்தவகையில் பலருக்கும் உடல் வெள்ளையாக இருந்த போதிலும் கால் கருப்பாக இருக்கிறது என்ற தகவலை இருந்து வருகிறது. அதை எப்படி நீக்குவது என்ற வழிமுறைகளை பார்க்கலாம்.

வழிமுறை 1

முதலில் நெயில் பாலிஷ் போடும் அனைவரும் அதை சுத்தமாக நீக்கும் மருந்து போட்டு கால்களை சுத்தமாக கழுவிவிட வேண்டும். அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு சுத்தமாக அகற்றி விட வேண்டும்.

வழிமுறை 2

நெயில் பாலிஷ் போட்டு காலை சுத்தமாக்கிய பிறகு ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் சுடுநீர் ஊற்றி ஷாம்பு கலந்து அதில் காலை கொஞ்ச நேரம் ஊற வைக்க வேண்டும். கொஞ்ச நேரம் ஊறிய பிறகு ஒரு பிரஷ் கொண்டு கால்களை நீரில் உள்ளேயே தேய்த்து அழுக்குகளை சுத்தமாக எடுத்து விட வேண்டும். பின்னர் காலை வெளியே எடுத்து துணியால் துடைத்துவிட வேண்டும்.

வழிமுறை 3

அழுக்கு நீரை ஊற்றி விட்டு மீண்டும் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாரி பிழிந்துவிட்டு அதில் ஒரு டேபிள் டீஸ்பூன் தேன் ஊற்றி கால்களை மீண்டும் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிழிந்த எலுமிச்சை தோலையும் அதில் போட்டு விட வேண்டும். அதன்பிறகு பியுமி கல்லை பயன்படுத்தி குதிகால்களை நன்றாக தேய்த்து எடுத்து பின்னர் துணியால் நன்கு துடைக்கவேண்டும்.

வழிமுறை 4

ஒரு சின்ன பாத்திரத்தில் கற்றாழை கொஞ்சம், இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, 2 டீஸ்பூன் காபி பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு பேஸ்ட் மாதிரி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதை காலில் பூசி 5 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு கைகளால் கொஞ்சம் மசாஜ் செய்துவிட்டு தூய நீரில் கழுவி விட வேண்டும்.

வழிமுறை 5

கடைசியாக நாம் வழக்கம்போல் வைத்திருக்கும் கெட்டியான பேஸ்ட் தன்மை கொண்ட அழகு சாதன பொருளை காலில் பூசி குறைந்தது பத்து நிமிடமாவது நன்றாக தேய்த்து பின்னர் தூய நீரில் கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வந்தால் விரைவில் கால் வெள்ளையாகும். அதுமட்டுமில்லாமல் காலில் வெடிப்பு தன்மை வருவது சரும பிரச்சனை போன்ற பலவற்றிற்கும் இது சிறந்த தீர்வாகும்.