கால் வெடிப்பை போக்க சிறந்த வழிகள்

கால் வெடிப்பை போக்க சிறந்த வழிகள்

முன்னரெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தான் குதிகால் வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதிலேயே அந்த பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் ஆங்கில மருத்துவத்தை நம்பினாலும் அதில் ஒரு சிலர் இயற்கை மருத்துவ முறைகளை இன்னமும் வலிமையாக நம்பிக் கொண்டு தான் அதைக்கொண்டு கால் வெடிப்பை ஆரம்பத்திலேயே எப்படி குணப்படுத்துவது என்ற வழிமுறைகளை பார்க்கலாம்.

தேன்

தேன் அனைவருக்குமே ஒரு இனிப்பு சுவை கொண்ட உணவு வகை என்பது தான் தெரியும். ஆனால் அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. தேனில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இதனால் தேனை குதிகாலில் நன்கு தடவி சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து தினமும் கழுவி வந்தால் கால்களிலுள்ள வெடிப்பு பிரச்சனை விரைவில் குணமாகும்.

மௌத் வாஷ்

இன்றைய இளைஞர்கள் பலரும் பிரஷ் கொண்டு பல் விலக்குவதை விட மருத்துவ செய்வதை அதிகம் விரும்புகின்றனர். அதற்கென ஒரு மருந்தை வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும் என்பது இன்றைய இளைஞர்களின் மன நோயாக உள்ளது. அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த மவுத்வாஷ் குதிகால் வெடிப்பை சரிசெய்யும் என்பதை நம்ப முடிகிறதா. மவுத் வாஷில் உள்ள சில பாக்டீரியாக்கள் காலில் உள்ள வெடிப்பை அகற்ற பெரிதும் உதவுகின்றன. மவுத்வாஷ் ஆசை இரண்டு மடங்கு நீரில் கலந்து தினமும் குதிகாலில் சில மணி நேரம் ஊற வைத்து கழுவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை நற்குணங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நம்ம ஊரில் தான் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்க்கும் அடிபட்டால் காயத்திற்கு வைப்பதற்கும் பயன்படுகிறது. ஆனால் கேரளாவில் முழுக்க முழுக்க தேங்காய் எண்ணெய் சமையல் தான். தேங்காய் எண்ணெயின் தன்மையே உடலை குளிர்ச்சியாக வைப்பதுதான். அந்த வகையில் தினமும் இரவு குதிகாலில் தேங்காய் எண்ணெயை வைத்து வந்தால் விரைவில் கால் வெடிப்பு சரியாகும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் பெரும்பாலும் வயிற்றில் உள்ள அழுக்கை போக்க தான் பயன்படுகிறது. ஆனால் அதே பழைய பலத்தை கொண்டு காலில் உள்ள வெடிப்பை ஈஸியா குணப்படுத்தலாம். வாழைப்பழம் சாப்பிடும் போது அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசி சிறிது நேரம் வைத்திருந்து நீரில் கழுவினால் வெகுவிரைவில் வெடிப்பு சரியாகிவிடும். ஆனால் வாழைப்பழம் நிறைய வழுவழுப்புத் தன்மை கொண்டதால் அதை பயன்படுத்த பலரும் தயங்குகின்றனர்.

பப்பாளி

நிறைய பேருக்கு பப்பாளி பழத்தின் நன்மை பற்றி தெரியாது. ஆனால் அதனுடைய தீமையை அரைகுறையாக தெரிந்து கொண்டு பலரையும் பயமுறுத்திக் கொண்டு இருப்பார்கள். இனி பப்பாளி பழம் பற்றி கவலை வேண்டாம். பப்பாளி பழம் உடல் நலத்திற்கு நல்லது தான். ஆனால் அதைவிட பப்பாளி பழம் சாப்பிடும் போது அதில் கொஞ்சம் எடுத்து குதிகால் வெடிப்பு பகுதியில் பூசினால் விரைவில் குணமாகும்.

இதுமட்டுமில்லாமல் வினிகர், சியா பட்டர், பால், ஆலிவ் ஆயில் போன்ற பல இயற்கை வழிகளில் கால் வெடிப்பை விரைவில் குணமாகி நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியும். ட்ரை பண்ணி பார்த்துட்டு ரிசல்ட் சொல்லுங்க.