ஜிம்முக்கு போனால் மட்டும் போதாது!இதையும் கட்டாயம் பண்ணனும்.

ஜிம்முக்கு போனால் மட்டும் போதாது!இதையும் கட்டாயம் பண்ணனும்.

இன்றைய தலைமுறையின் வாழ்க்கை ஒரு பாஸ்ட் புட் கடை போல தான். வேக வேகமாக செயல்பட்டு வருகிறது. இதனால் நம்முடைய ஆரோக்கியம் கெட்டுப் போகிறது என்பது பலரும் யோசிக்காத ஒன்றாகவே உள்ளது.

சரி என்னதான் கோடி கோடியாய் பணம் சம்பாதித்தாலும் கடைசியில் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் அமைப்பும் மனவலிமையும் தேவை தானே. ஆனால் சில சமயம் அந்தப் பணமே இவ்விரண்டையும் அழித்து விடுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம். ஆரோக்கியமான வாழ்வுக்கு அப்படி என்னதான் அவசியம் என்று தானே கேட்கிறீர்கள். சொல்கிறேன் கேளுங்கள்.

ஜிம்முக்கு போனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். அது தான் ஆரோக்கியமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வோம். வெறும் ஜிம்முக்கு செல்வதால் மட்டுமே ஒருவருடைய உடல் நன்மையை பெறாது. அதற்கேற்றவாறு உணவுகளும் எடுத்துக் கொள்வது அவசியம்.

அந்த வகையில் என்னென்ன உணவுகளை எப் படி அருந்த வேண்டும் என்பது பற்றி ஒரு சிறு குறிப்பு பார்ப்போம்.

மீன்

அசைவப் பிரியர்கள் பெரும்பாலும் சிக்கன் மட்டன் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது மீன் சாப்பிட்டு வந்தால் உடல் சரும பிரச்சனையை எளிதில் குணமடையச் செய்யலாம். மீனில் உள்ள ஒமேகா-3 புரதச் சத்து நிறைந்தவை.

க்ரீன் டீ

உடம்பு மூளையும் புத்துணர்ச்சி இல்லாத சமயத்தில் அதை மீட்டுக் கொண்டுவர கிரீன் டீ பெரிதும் உதவுகிறது. இது எண்டோர்பின் என்ற சக்தியூட்டும் ஹார்மோன் சுரக்க வழி செய்கிறது.

அக்ரூட் பருப்பு

இன்றைய காலகட்டங்களில் வயது குறைவான நபர்களுக்கு கூட மாரடைப்பு வருவது சகஜமாகிவிட்டது. அப்படி மாரடைப்பு போன்றவற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தினமும் 5 முதல் 6 அக்ரூட் பருப்புகள் எடுத்துக் கொண்டால் நல்லது.

உணவில் மஞ்சள்

தெரிந்தோ தெரியாமலோ அன்றைய காலகட்டங்களில் இருந்து உணவுகளில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. ஆனால் அதனுடைய தன்மை என்ன என்பது பலருக்கும் தெரியாது. மூளையில் உள்ள நினைவாற்றலை 30 சதவிகிதத்திற்கும் மேல் அதிகமாக ஏற்படுத்துவதற்கு மஞ்சள் பெரிதும் உதவி செய்கிறது.

பதப்படுத்தப்பட்ட தேன்

இயற்கை கொல்லிகள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட தேனை தினமும் எடுத்துக்கொண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். உடம்புக்கு முடியாமல் இருக்கும் நேரத்திலும் தேனை எடுத்துக் கொண்டால் மிக விரைவிலேயே அந்த நோயை குணமாக்குமாம்.