நீண்ட ஆயுளுக்கு பின்பற்றவேண்டிய உணவு முறைகள்

நீண்ட ஆயுளுக்கு பின்பற்றவேண்டிய உணவு முறைகள்

உணவே மருந்து என்று சொல்லும் வாசகத்தில் நூற்றுக்கு நூறு உண்மை உள்ளது. அதே போல் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியும் உண்மைதான். இந்த இரண்டிலுமே உணவு ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டங்களில் பாஸ்போர்ட் கலாச்சாரங்கள் அதிகரித்துள்ளதால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் எதையாவது ஒன்றை உண்டு விடுகிறோம். அது நமக்கே தெரியாமல் பின்னாளில் தொந்தரவை ஏற்படுத்தி விடுகிறது.

அதன்பிறகு ஹாஸ்பிடலில் லட்ச லட்சமாய் பணம் கொட்டி என்ன பயன். ஆகையால் இந்த வகை உணவு உண்டாலும் அதை எப்படி உண்ணவேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் கண்டிப்பாக உடல்நலத்தில் எந்த தீங்கும் ஏற்படாது. அதேபோல் ஒருபோதும் வயிறு முட்ட சாப்பிடுவதை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட உணவு சாப்பிட்ட பிறகு சில உணவுகளை தொட்டுக் கூட பார்க்க கூடாது. அது என்னென்ன என்பதை பார்ப்போம்.

 • காய்கறிகளை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடுவதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
 • மீன் சம்பந்தப்பட்ட உணவுகளை உண்ட பிறகு பால் தயிர் போன்ற உணவுகளை கிட்டக் கூட சேர்க்கக்கூடாது. அப்படி உண்டால் உடலில் வெண்மை தோல் போன்ற சரும பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
 • மூலம் பிரச்சனை உள்ளவர்கள் முட்டை அசைவ உணவுகள் அதிக தரமான உணவுகள் தவிர்த்துவிடுவது நல்லது.
 • இன்று பலரும் விடியற்காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுகிறோம். ஆனால் தண்ணீருக்கு பதிலாக காபி டீ குடித்தால் கண்டிப்பாக உடலில் பிரச்சனை ஏற்படும். எழுந்தவுடன் குறைந்தது ஒரு சொம்பு தண்ணி யாவது குடித்துவிட வேண்டும்.
 • அல்சர் உள்ளவர்கள் மிளகாய் எலுமிச்சை போன்றவற்றை கண்ணால் கூட பார்க்க கூடாது. அப்படி மீறியும் சாப்பிட்டுவிட்டால் தொந்தரவு உங்களுக்குத்தான்.
 • பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்கள் கோதுமை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதில் ஆர்வம். அதில் தவறில்லை. ஆனால் அந்த கோதுமையை நல்லெண்ணெயுடன் பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும். இல்லை என்றால் ஆபத்து தான்.
 • பெண்கள் மாதவிடாய் காலங்களில் எள்ளு, அன்னாசி, பப்பாளி போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது.
 • தேன் சாப்பிடும் போது நெய் சாப்பிடக்கூடாது. நெய் சாப்பிடும்போது தேனை தொடக்கூடாது. அப்படி மீறி தொட்ட, நீ கெட்ட.
 • அதேபோல் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு பால் தயிர் போன்ற பொருட்களை உண்ணக்கூடாது. இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
 • ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கி, பூசணிக்காய் தக்காளி போன்ற உணவுகளை கைவிடுவது அவர்களது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

அசைவப் பிரியர்கள் செய்யவேண்டியவை:-

 • பொதுவாகவே நமது குடலானது அசைவம் சாப்பிடுவதை விட அசைவம் சாப்பிடும் போது இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும். அந்த நேரத்தில் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • மேலும் அசைவ உணவுகளை குளிர்சாதன பெட்டியில் இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்து சாப்பிடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. ஆனால் அப்படி செய்வது கொஞ்சமும் நல்லதல்ல. அசைவ உணவுகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து சாப்பிடுவது விஷம் அருந்துவதற்கு சமம் என்கிறது மருத்துவ வட்டாரம்.

“அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்”