தூக்கம் குறைந்தால் முடி கொட்டுமா? 90’s kids கவனத்திற்கு!

தூக்கம் குறைந்தால் முடி கொட்டுமா? 90’s kids கவனத்திற்கு!

நம்மில் பலரும் இரவு நேரங்களில் தாமதமாக தூங்கும் வழக்கம் உடையவர்களாக சமீப காலத்தில் மாறிவிட்டோம். மேலும் இரவில் வெகு நேரம் கண் முழித்து வேலை செய்திடும் நபர்கள், தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் வெகு நேரம் கண் விழித்து மெசேஜ் செய்திடுவோர், தூங்காமல் டிஜிட்டல் திரையை பார்த்து படிப்போர் மற்றும் போர் அடிக்கிறது என்று டிஜிட்டல் திரையை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் நபர்கள் என அனைவருக்கும் இந்த பதிவினை கவனமாக பார்க்கவும். குறிப்பாக 90’s kids’க்கு முடி கொட்டுதல் போன்ற பிரச்சனை அதிகமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர், ஆக அவர்களும் இதனை கவனத்துடன் பார்த்திடவும்.

  1. தூக்கத்தின் உலக வழக்கம்

தூக்கத்தின் உலக வழக்கம் என்ற தலைப்பு சற்று புரியாதது போல இருந்தாலும், இதனை நாம் கண்டிப்பாக ஒரு முறை recap செய்து பார்க்க வேண்டிய ஒன்று. இந்த உலகம் உருவானது முதல் காலை மற்றும் இரவு நேரங்கள் தொடர்ந்து ஒரு சுழற்சிமுறையில் தினமும் இருந்து வருகின்றனர். இந்த கால நிலைக்கேற்ப நம் கிரகத்தில் வாழும் உயிரனங்கள் தங்களது குணாதியசங்களை மாற்றி வருகின்றனர். காலையில் சூரியன் வந்து ஒளியினை தரும், இரவு நேரத்தில் நிலா வெளிச்சம் தவிர்த்து வேறு எதுவும் இல்லாததால் பூமி முழுவது இருட்டாக இருக்கும். இப்படி இருப்பதால் உயிரினங்கள் அனைத்தும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு, பகலில் தங்களது தினசரி வேலைகளை செய்வதற்கும் தங்களை பழக்கப்படுத்திக்கொண்டனர்.

  1. செயற்கை ஒளியின் வரவும், பாதிப்பும்

சூரியன் இருக்கும் தருணத்தில் நாம் சுறுசுறுப்பாக இருப்போம், இரவு நேரத்தில் நாம் தூங்க போவோம். இப்படி இருக்க, விஞ்ஞானத்தின் கண்டுபிடுப்புகளான செயற்கை ஒளியினை கொடுக்க கூடிய bulb, டிஜிட்டல் LED, LCD போன்றவை நமது தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்க ஆரம்பித்தது. செயற்கை ஒளியானது இரவு நேரத்திலும் நாம் பயன்படுத்துவதால், அது நமது மூளைக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தி அதனை சரியான நேரத்தில் தூங்கவிடாமல், தூக்கத்தை கெடுக்கவும் வழிவகை செய்தது.

  1. தூக்கம் – முடி கொட்டுவதற்கான connection

நம் உடலில் உள்ள melatonin மற்றும் cortisol என்ற இரு ஹார்மோன்கள் நமது தூக்கத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. melatonin என்ற ஹார்மோன் இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும், இது நாம் நன்றாக தூங்குவதை உறுதிபடுத்திடும். மேலும், இரவு நேரம் ஆகும் பட்சத்தில் இருட்டில் அதிகமாக சுரந்து நம்மை தூங்க தூண்டிடும், மேலும் இது ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் குறைவாகவே சுரக்கும். அதே சமயம் cortisol என்ற ஹார்மோன் பகலில் அதிகமாக சுரக்கும், வெளிச்சம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இது அதிகமாக சுரந்து நம்மை தூக்கத்தில் இருந்து எழுப்புகிறது.

இப்படி இருக்க, இரவு நேரத்தில் செயற்கை வெளிச்சம் அதிகமாக இருந்து நாம் வெகுநேரம் அதில் இருந்தால் அது நம் தூக்கத்தில் அதிகமாக பாதிக்கும். இந்த ஹார்மோன்கள் நமது தூக்கத்தை கட்டுப்படுத்திகிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருப்பீர்கள், இப்போது,இது எப்படி நம் முடி வளர்ச்சியை தடை செய்கிறது என்று பாப்போம்.

நாம் சரியாக தூக்காமல் இருந்தால் நமது உடலில் melatonin குறைவாக சுரந்து cortisol அதிகமாக சுரக்கும். இப்படி இந்த ஹார்மோன்களில் சுரக்கும் விகிதம் மாறும்போது நமக்கு முடி கொட்டு பிரச்சனை ஏற்படும்.

  1. முடி வளர்ச்சி மற்றும் உதிரும் தருணங்கள்

நமது முடி வளர்ச்சியில் 3 பகுதிகள் உள்ளது growth, transitional மட்டும் rest பகுதிகள்.

Growth பகுதி

இந்த பகுதியில் நமது முடியானது உதிர்ந்து மீண்டும் புதிய முடி 2 – 6 வருடங்களுக்குள் 1 மீட்டர் வரை வளர கூடும்.

Transitional பகுதி

இந்த பகுதியில் நமது முடிக்கான ரத்த ஓட்டம் முற்றிலும் நின்றுவிடும், இது போன்ற முடி ஒரு 2- 3 வாரம் வரை இருக்கும். அத்துடன் அந்த இடத்தில் முடி வளர்ச்சியும் நின்று விடும்.

Rest பகுதி

ரத்த ஓட்டம் இல்லாததால் முற்றிலும் நமது முடி வளர்ச்சி நின்றுவிடும். இது போன்ற முடி தான் நம் தலையில் இருந்து தினமும் உதிர்ந்து வருகிறது.

இப்படி உதிரும் முடியானது growth பகுதியில் தொடங்கி மறுபடியும் முதலில் இருந்து வளர 2 – 6 வருடங்கள் எடுக்கும். இப்போது cortisol அளவு குறையும் போது rest பகுதியில் இருந்து Growth பகுதிக்கு முடி வளர்ச்சி செல்லும் போது அதனை பெரிதும் பாதிக்கும்.

  1. சொட்டை வில எது காரணம்

சொட்டை வில தூக்கம் இன்மை கண்டிப்பாக காரணமாக இருக்காது. அது பெரிதும் நம் முன்னோர்களின் gene போன்றவை பெரிதும் காரணமாக இருக்கு வாய்ப்பிருக்கிறது.

  1. டிஜிட்டல் திரையில் பாதிப்பை தவிர்ப்பது

தற்போதைய காலத்தில் டிஜிட்டல் திரையை பயன்படுத்தாதவர்கள் என்று யாருமே இல்லை. பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் திரையை பயன்படுத்துகின்றனர். இப்படி டிஜிட்டல் திரையை பயன்படுத்துவதால், நமக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடும், வெளிச்சத்தை பார்ப்பதால் நம் மூளை இது பகல் என்று நினைத்து நம்மை தூங்க விடாமல் செய்திட அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் டிஜிட்டல் திரைகளில் இருந்து வரும் blue light, நம் கண்களுக்கும் , தூக்கத்திற்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்த கூடியது. இதனை தவிர்க்கு நாம் night mode’ஐ பயன்படுத்தலாம். சமீபகால ஆராச்சியாளர்கள் night mode’உம் சற்று ஆபத்தானது தான் என்று கூறி உள்ளனர். அதனால் நாம் dark mode’ஐ பயன்படுத்துவது மேலும் சிறந்தது.

இந்த பதிவு உங்களுக்கு கண்டிப்பாக பெரிதும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம். சரியான நேரத்தில் தூங்கி, நம் கண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்து டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டை குறைத்தால் நம் முடி நன்றாக வளர்ந்து, நன்றாக நம் உடல் நலமும் மேம்படும்.