இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நோயே வராது

இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நோயே வராது

இப்போதெல்லாம் நாம் அனைவரும் நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்கிறோம். மேலும் இதனால் நமக்கு பலவிதமான உடல் உபாதைகள் வருகின்றன. அத்துடன் இது நம்மை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக விரைவில் மாற்றுகிறது. மற்றும் உடலுக்கு நன்மைகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

அவல்

இது நமது உடல் சூட்டைத் தணிக்கிறது, செல்கள் புத்துணர்ச்சி அடையும், உடல் பருமனை குறைக்கும், நமது மூளை செல்களை புத்துணர்ச்சியாக்கும், உள்ள கொழுப்பை முற்றிலுமாக குறைந்து விடும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவிடும், மேலும் புற்றுநோய் ஏற்படும் செல்கள் நமது உடலுக்குள் செல்லாத வண்ணம் இது தவிர்க்கும், சர்க்கரை நோயாளிகள் இதனை கண்டிப்பாக சாப்பிட வேண்டும், நமது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்துடன் அவலில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.

வேர்க்கடலை

வேர்க்கடலையை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது மூளையின் கூர்மை அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இது மூளைக்கு ரத்தம் சீராக செல்ல பெரும் பங்காற்றுகிறது, சிறு குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் அமினோ சரியாக கிடைத்திட இது முக்கிய பங்காற்றுகிறது, முக்கியமாக இது சிறு குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி மிகவும் சீராக இருக்கும், இது உடலில் கெட்டக் கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது இதனால் நம்மை இதயநோய் அண்டவே அண்டாது.

பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழத்தில் நமக்கு தேவையான மெக்னீசியம், பொட்டாசியம், ஐயன், காப்பர், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ போன்றவற்றை நம்மால் பெற்றிட முடியும். அத்துடன் இதில் அதிக அளவு நார்சத்து இருப்பதால் நமது செரிமான உறுப்பை மிகவும் சிறப்பாக செயல்பட செய்திடும். இதனால் நமக்கு குடல் புற்றுநோய் வரும் அபாயம் பெரிய அளவு குறைக்கப்படும். மேலும் ரத்த சோகை வருவதையும் இது தடுக்கும். அனைத்து சத்துக்களும் நிறைவாக கிடைத்திடும்.

முளைக்கட்டிய பயிர்கள்

இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது. இதில் விட்டமின் ஈ நிறைந்துள்ளதால் கண்களின் பார்வை அதிகரிக்கும், மேலும் அல்சரை கட்டுப்படுத்தும், ஒமேகா அமிலம் இதில் அதிகமாக உள்ளதால் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும், மேலும் இது நமது ஹார்மோன்களை சீராக சுரக்கச் செய்கிறது, பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை சீராக இருக்க செய்கிறது, ரத்தக் குழாய் அடைப்பைத் தடுக்கிறது, ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது.

உலர் திராட்சை

இதனை நாம் சிறிதளவு வாயில் மென்று சாப்பிட்டால் எலும்பு மஜ்ஜையை பலப்படுத்தும், நமது எலும்பினை இது மிகவும் பலப்படுத்துகிறது. பல் சம்பந்தமான பிரச்சினைகளையும் இது கட்டுப்படுத்தும், மேலும் செரிமானத்தையும் இது சரி செய் வதால் மலச்சிக்கல் முற்றிலுமாக அகற்றப்படும், பார்வை குறைபாட்டை நீக்கும், மூட்டுவீக்கம் முடக்கு வாதம் போன்றவற்றை நீக்கும், ஆண் பெண் இருபாலருக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும், பார்வை குறைபாட்டை போக்கி தோலில் உள்ள செல்களைப் பாதுகாக்கும் திறன் இந்த உலர்ந்த திராட்சைக்கு உண்டு.

நொறுக்குத் தீனிகளை சாப்பிடாமல் இது போன்ற சத்தான ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடவும்.