சுத்தி விளையாடுமா இந்தியா – IND vs ENG

சுத்தி விளையாடுமா இந்தியா – IND vs ENG

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் அணி 4 டெஸ்ட், 5டி20, 3ஒருநாள் போட்டிகளில் அந்த அணி விளையாட உள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் தொடங்கியது. மேலும் இந்த போட்டிகளில் ரசிகர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.

கொரோனாவால் பல மாதங்கள் வீட்டில் முடங்கி கிடந்த மக்களுக்கு இது ஒரு சிறப்பான பொழுதுபோக்காக இருக்கும். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் கேப்டன் விராத் கோலி இந்த ஆட்டத்தில் களம் இறங்கியுள்ளார்.

எப்படி இருந்தாலும் ஆட்டம் நடைபெறுவது சேப்பாக்கம் என்பதால் இந்திய அணியின் கை சற்று ஓங்கியே உள்ளது. ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மிகவும் திறமைசாலி. அணியை ஆட வைப்பதுடன் அவரும் சேர்ந்து ஆடி அணியை கரை சேர்ப்பதில் வல்லவர். ஆகவே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.