IND vs ENG முதல் டெஸ்ட் போட்டி! மளமளவென ரன்களை குவித்த இங்கிலாந்து

IND vs ENG முதல் டெஸ்ட் போட்டி! மளமளவென ரன்களை குவித்த இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்களை குவித்துள்ளது. மேலும் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் டோமினிக் பெஸ் 28, ஜாக் லீச் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் இரட்டை சாதம் அடித்து அணிக்கு மேலும் வலுசேர்த்துள்ளார், மேலும் அவர் 218 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இதன் மூலம் நமது இந்திய அணிக்கு பெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எந்த ஒரு இலக்கையும் சவாலாக எதிர்கொண்டு முடிக்கும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது, இதனால் கண்டிப்பாக ஆட்டத்தை குறித்த எதிர்பார்ப்புகள் எகிற தொடங்கியுள்ளது.