கலைமாமணி விருதுகள் – யார் யாருக்கென்று தெரியுமா!!

கலைமாமணி விருதுகள் – யார் யாருக்கென்று தெரியுமா!!

சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கான 2019 – 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கான அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், நடிகை சரோஜா தேவி, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளது. சவுக்கார் ஜானகி, ராமராஜன், யோகி பாபு, தயாரிப்பாளர் ஐசரி வேலன், கலைப்புலி தாணு , கவுதம் மேனன், லியாகத் அலிகான், பின்னணி பாடகி ஜமுனா ராணி உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

இசையமைப்பாளர் தினா, டி.இமான் இயக்குனர்கள் மனோஜ்குமார், ரவிமரியாவுக்கும் விருது வழங்கப்படவுள்ளது. நடிகை சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ்,தேவதர்ஷினி மதுமிதாவுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், நடிகர் நந்தகுமாருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், தினேஷுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இவர்கள் அனைவருக்கும் நாளை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.