இந்த 4 விஷயத்தை செய்யாதீங்க.. சிறுநீரகம் காலியாகிவிடும்

இந்த 4 விஷயத்தை செய்யாதீங்க.. சிறுநீரகம் காலியாகிவிடும்

இந்த அவசரமான காலகட்டங்களில் கோடி கோடியாய் தேடித்தேடி பணம் சம்பாதிப்பதே நம்முடைய தலைமுறையினர் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் நம்மை அறியாமலேயே சில தவறான விஷயங்களால் நம் உடலில் உள்ள பாகங்கள் பலதும் பழுதடைந்து வருகிறது.

கடந்த சில வருடங்களில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகம் வருவதாக ஒரு டாக்டர் ரிப்போர்ட் கூறுகிறது. நாம் சாதாரணமாக உண்ணும் உணவுகளில் இருந்தே இந்த பிரச்சனைகள் உருவாகிறது என்கிறது உலக மருத்துவம்.

சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இந்த நான்கு விஷயங்களையும் செய்யாமல் இருப்பது நல்லது.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது:-

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்ன சொல்றீங்க சாப்பிடக்கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்கக்கூடாது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடும் போது சிறுநீரகத்திற்கு அதிக அளவு அழுத்தம் ஏற்படும். இதனால் அதனுடைய செயல்பாட்டில் பிரச்சனை ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மருத்துவ அறிவுரை இல்லாமல் மாத்திரை சாப்பிடுவது:-

சிலர் தங்களைத் தாங்களே ஒரு பெரிய டாக்டர் என நினைத்துக் கொண்டு சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நேரடியாக மெடிக்கல் சென்று மாத்திரை மருந்துகள் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த பழக்கம் இருந்தால் அடியோடு நிறுத்திக் கொள்வது நல்லது. அந்த மாதிரி மருத்துவ அறிவுரை இல்லாமல் அடிக்கடி மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனைகள் வரும்.

மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்:-

இன்றைய இளைஞர்களுக்கு மது அருந்துவதும் புகை பிடிப்பதும் இளம் வயதில் கெத்து காட்டுவதாக நினைத்துக் கொள்கின்றனர். அதேபோல் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவதற்காக கண்டிப்பாக புகை பிடித்தே ஆக வேண்டும் என்ற மன நிலையும் இருக்கிறது. அப்படி புகை பிடிக்கும் போது அந்த புகை மனிதனின் உடலுக்குள் சென்று ஆங்காங்கே படிந்து விடுகிறது. அதைப்போல் தான். இதை வடிகட்டி வதற்காக சிறுநீரகம் பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்கிறது. இதனாலேயே நாளுக்கு நாள் பாதிப்புகள் வர தொடங்கிவிடுகிறது.

இனிப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வது:-

ஸ்வீட் என்றால் யாருக்குதான் பிடிக்காது. ஆனால் அதை அதிக அளவு உட்கொள்ளும் போது உடலில் உள்ள சோடியம் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரித்து சிறுநீரகத்திற்கு அழுத்தம் கொடுக்க தொடங்குகிறது. இதனால் அதை வடிகட்டும் போது சிறுநீரகம் செயலிழக்க அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது.