நோயில்லாமல் வாழ இந்த நாட்டு மருத்துவம் போதும்!

நோயில்லாமல் வாழ இந்த நாட்டு மருத்துவம் போதும்!

என்னதான் கோடி கோடியாக செலவு செய்து இங்கிலீஷ் மெடிசன் தயாரித்தாலும் இன்னமும் ஆயுர்வேதம் போன்றவற்றிற்கான மவுசு குறைந்தபாடில்லை. அதில் அத்தனை நல்ல குணாதிசயங்கள் இருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தை பொருத்தவரை ஒருவேளை சோற்றுக்கு பஞ்சம் இருந்தாலும் நோய் நொடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. குணமாக்க முடியாது என்று தெரிந்தும் தனியார் மருத்துவமனைகளில் லட்ச லட்சமாய் பணத்தைக் கொண்டு போய் கொடுக்கின்றனர்.

ஆனால் எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதற்கு ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் தீர்வு கிடைக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அதை தெரிய வைப்பதற்கு தான் இந்த பதிவு.

ஆயுர்வேதம்

காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஏற்படும் நோய்களுக்கு சிறந்த மருத்துவமாக ஆயுர்வேதம் எடுக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த முறை மருத்துவம் நல்ல தீர்வு கொடுக்கிறது.

சித்த மருத்துவம்

இந்த முறை மருத்துவத்தில் மருந்துகள் மூலிகைகள், தாதுப் பொருட்கள் போன்றவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றன. உணவே மருந்து என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் சித்த மருத்துவம் தான். ஒரு நோயாளியின் பித்தம் வாதம் கப உடலமைப்பு போன்றவற்றைப் பொருத்து அதற்கேற்றபடி மருந்துகள் கொடுத்து நோய்களை சரி செய்து வருகின்றனர்.

ஹோமியோபதி

இந்த ஹோமியோபதி என்ற பெயரை அடிக்கடி கேள்விப் பட்டிருந்தாலும் இதில் எந்த மாதிரி சிகிச்சைமுறை இருக்கும் என்பது பலருக்கும் கேள்வியாகவே இருக்கிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்தின் அளவை குறைத்து வீரியத்தை கூட்டி விரைவில் குணம் அடையச் செய்வதும்தான் இதன் நோக்கம். வெறும் நோயின் அறிகுறிகளை மட்டுமே வைத்துக்கொள்ளாமல் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை குறித்தும் விசாரித்து அதன் பிறகு இந்த வகை மருத்துவம் கொடுக்கப்படுகிறது.