விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா – சோகத்தில் ரசிகர்கள்

விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா – சோகத்தில் ரசிகர்கள்

திருட்டுப்பயலே, வெற்றிக்கொடிகட்டு போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையும் ஆவார்.

இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் இவர் படங்களில் நடிப்பதில்லை, ஆனால் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போஸ்ட் செய்து கொண்டிருப்பார்.
தற்போது இவர் இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சைக்கிள் ஒட்டி செல்லும் போது செல்லும் போது விபத்தில் சிக்கி அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் அவர் நான் ஒரு போர் வீராங்கனை என்றும், இந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்து நான் விரைவில் மீண்டு வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.