பேய்க்கு பயப்படும் 5 ராசிக்காரர்கள்.. பயந்து என்ன பண்ணுவாங்க தெரியுமா?

பேய்க்கு பயப்படும் 5 ராசிக்காரர்கள்.. பயந்து என்ன பண்ணுவாங்க தெரியுமா?

என்னதான் நவீன காலகட்டங்கள் வந்தாலும் இன்னமும் ஜாதகம் பார்ப்பதில் இருந்து சாமி கும்பிடுவது வரை அனைத்தும் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடவுள் இல்லை என சொல்லுபவர்கள் ஒரு கூட்டம் என்றால் கடவுள் இருக்கிறார் என்று சொல்ல ஒரு கூட்டம் உள்ளது. இப்படி நம்பிக்கைகள் இருக்கும் வரை ஜாதியை சம்பிரதாயம் சாஸ்திரம் என எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதேபோல்தான் இந்த பேய் கதை. இன்றும் பேய் ஓட்டுவதற்கு என கோவில்களிலும் மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் ஒரு சில சடங்கு சம்பிரதாயங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஒருசில ராசிக்காரர்களுக்கு பேய் என்றால் சுத்தமாக அது என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை பார்ப்போம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் என வெளியில் கெத்தாக சொல்லிக்கொண்டாலும் இவர்களுக்கு பேய் என்றால் அவ்வளவு பயமாம். சிம்ம ராசிக்காரர்களுக்கு அமானுஷ்யம் பேய் இதுபோன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் இருப்பதால் அது பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றனர். இதுவே அவர்களது பயத்தை அதிகரிக்க இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள் அஸ்ட்ராலஜிஸ்ட்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் எப்போதுமே தெரிந்து கொள்ளக் கூடாத விஷயங்களை அதிகாரம் காட்டி தெரிந்து கொள்ள நினைப்பார்கள். அப்படி அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களில் செம ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதனால் அதனுடைய உண்மை பொய் என அனைத்தையும் தெரிந்து கொண்டு அது பற்றிய பயத்தில் அதிகம் பேர் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எப்போதுமே ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார்கள். அது நல்லதோ கெட்டதோ அனைத்து விஷயத்திலும் மூக்கை நுழைத்து அது எப்படி என தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அவர்கள் பேய் பிசாசு அமானுஷ்யம் போன்ற விஷயங்களை தெரிந்து கொண்டாலும் அதை பற்றி பயப்படுவதில்லை என்பதே பரவலான கருத்து.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பொதுவாகவே அமானுஷ்யம் போன்ற விஷயங்களை தெரிந்துகொண்டு அதை பற்றி மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தன்னுடைய நெருங்கிய வட்டாரங்கள் அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் பேய் சம்பந்தப்பட்ட கதைகளை கொஞ்சம் மிகைப்படுத்தி கூறுவார்கள். இவர்களுக்கு அமானுஷ்ய விஷயத்தில் நாட்டம் அதிகம் என்பதால் அது பற்றிய பயமும் இவர்களுக்கு ஜாஸ்தி.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மந்திர தந்திரங்களுக்கு பெயர் போனவர்கள். அவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள் மற்றும் அதைப் பற்றிய விசயங்களை தேடித்தேடி படிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். கொஞ்சம் கூட உண்மை தன்மை இல்லாத விஷயங்களில் நாம் இருக்க வேண்டும் என்பது போன்ற மனநிலை உடன் சுற்றி வருபவர்கள்.