ராமேஸ்வரத்தில் ஒரே நேரத்தில் 100 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது

ராமேஸ்வரத்தில் ஒரே நேரத்தில் 100 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது

ராமேஸ்வரத்தில் டாக்டர் APJM அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி ‘பேலோட் க்யூப்ஸ் 2021 நிகழ்வில் அரசு பள்ளி, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவராலும் இணைந்து வடிவமைக்கப்பட்ட 100 பெம்டோ செயற்கைக் கோள்கள் இரு இராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இன்று விண்ணில் செலுத்தப்பட்ட இந்த பெம்டோ செயற்கைக்கோள்கள், விவசாயம், தகவல் தொலைத்தொடர்பு பயன்படுத்துவதாகவும் காற்றில் எவ்வளவு மாசு உள்ளது கார்பன்-டை-ஆக்சைடு, ஆக்சிஜன் அளவையும் இதன்மூலம் கண்டறியலாம் என்று கூறப்படுகிறது.

ககன்யான் திட்டத்தில் ஆட்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாகவும் இதற்காக ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு குரூப் ஆப் விமானிகளை தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிலவில் யுரேனியத்தை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்த ஹீலியம் 3 உள்ளதாகவும் பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குனர் சிவராம் பிள்ளை தெரிவித்தார்.