பள்ளிக்கு வர அனுமதி கடிதம் அவசியம்!!

பள்ளிக்கு வர அனுமதி கடிதம் அவசியம்!!
School girls

தமிழகத்தில் பிப் 8 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக்கு வர பெற்றோர்களின் அனுமதி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெற்றோர் தங்களது பிள்ளைகள் பள்ளிக்கு வர சம்மதிப்பதாக கடிதம் அனுப்பும் பட்சத்தில் தான் அவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

மேலும், 9 & 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகளை திறக்க தமிழிக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போதும் இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு அரசிடம் இருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எப்படிப்பட்ட கருத்து வெளிப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.