புகைப்பிடிப்பதால் ஏற்படும் பற் கறைகளை போக்குவதற்கான வழிகள்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பற் கறைகளை போக்குவதற்கான வழிகள்

புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆட்டு என்று முன்னோர்கள் சொன்னாலும் சொன்னார்கள் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் இளைஞர்கள் அதிகம் தேடிச் செல்வது சிகரெட்டை தான். அதை உறிஞ்சி இழுத்தாள் தான் அவர்களுக்கு சொர்க்கமே கிடைப்பது போல நினைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வேலைப்பளு அதிகம் இருந்தால் அதை போக்க சிகரெட் தான் ஒரே வழி என இன்றைய தலைமுறையினர் அதிகம் புகைபிடிப்பதை ஒவ்வொரு ஐடி தொழில்நுட்ப அலுவலகங்களுக்கு அருகேயுள்ள பொட்டிக்கடையை பார்த்தால் தெரிந்துவிடும்.

சரி அப்படி இடைவிடாமல் புகைத்தால் வாயினுள் உள்ள பற்கள் முதற்கொண்டு அனைத்தும் சேதாரமாக வாய்ப்பு உள்ளது. அது மட்டுமில்லாமல் அந்த புகை பற்களுக்கு இடையில் தங்கி அசிங்கமான தோற்றத்தை ஏற்படுத்தும். அதை நீக்குவதற்கான வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பற்களை மென்மையாக வைத்துக் கொள்ளுதல்:

எப்போதுமே காலை மற்றும் மாலை இரண்டு நேரமும் பல் துலக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் உண்டு. அப்படி செய்தால் பற்கள் எப்போதுமே மென்மை தன்மையுடன் இருக்கும். அப்படி இருக்கையில் புகைப்பிடித்தல் பாக்கு போடுதல் போன்றவை பற்களில் படிந்து அசிங்கமான கரைகளை ஏற்படாமல் இருப்பதை தடுக்கிறது.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து வருகிறது அதில் ஒன்றுதான் பற்களை தூய்மையாக வைத்துக் கொள்வது தினமும் பல் துலக்கி விட்டு பின்னர் சிறிது பேக்கிங் சோடா பவுடரை வைத்து பற்களை துலக்கினால் பாக்டீரியாக்கள் அழிந்து பற்கள் எப்போதும் சுத்தமாக இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி பழங்கள்:

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாப்பிடுவதால் பற்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆகவேண்டும். ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாப்பிடுவதால் பற்களில் உள்ள மஞ்சள் தன்மை நீங்கி எப்போதும் பற்கள் பளிச் தன்மையுடன் இருக்கும். இதே ஸ்ட்ராபெர்ரியை பேக்கிங் பவுடருடன் கலந்து சிறிது நேரம் பற்களில் பூசி வைத்துவிட்டு பிறகு வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் தேவையில்லாமல் பாக்டீரியாக்கள் தங்குவது தடுக்கப்படுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை கொடுக்கிறது. எலுமிச்சை சாரை பயன்படுத்தியபோது வாய்க்கொப்பளித்து வந்தால் பற்களில் தேவையில்லாத பாக்டீரியாக்கள் தங்குவதை தடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் எலுமிச்சை தோலையும் பற்களில் தேய்த்து வரலாம். ஆனால் இதை அளவுக்கு அதை பயன்படுத்தினால் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் தேவையில்லாத பிரச்சினைகளை வாயில் ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.