ஹீரோவாகும் சூரி!! அப்பாவாகும் விஜய்சேதுபதி?

ஹீரோவாகும் சூரி!! அப்பாவாகும் விஜய்சேதுபதி?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் சூரிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசுரன், பாவக்கதைகளில் இடம்பெற்ற நான்கில் ஓர் இரவு என்ற பல வெற்றி படங்களை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து ஒரு புதிய படத்தினை எடுத்து வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.அத்துடன் இந்த படத்தின் பாடல் பதிவையும் இளையராஜா ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

முன்னதாக இப்படத்தில் பாரதிராஜா சூரியின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில், தற்போது படப்பிடிப்பு பகுதியில் நிலவும் கடும் குளிர் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது. இதன் காரணமாக நடிகர் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் சேதுபதியை வயதான தோற்றத்தையுடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.