டக்கரான தமிழரின் உணவுகள்

டக்கரான தமிழரின் உணவுகள்

நீங்கள் எப்படிப்பட்ட உணவு பழக்கத்தை பின்பற்றினாலும் நமது தமிழ் கலாச்சாரத்திற்கு ஒத்த இருக்கும் பல உணவுகளை நீங்கள் மிஸ் செய்யவே முடியாது. அப்படிப்பட்ட அற்புதமான சில தமிழ் உணர்வுகள் குறித்து இங்கே பார்த்திடுவோம்.

  1. சாம்பார்

இது ஒரு அற்புதமான உணவாகும், தமிழ் மக்கள் சாம்பாரினை இட்லி,தோசை,சாதம் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவர். இது உண்மையில் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகவும் கருதப்படுகிறது. பருப்பு, புலி, மிளகு,தக்காளி மற்றும் பல காய்கறிகள் இந்த சாம்பாரை சமைக்க பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சாம்பார் பல உணவுப் பிரியர்களின் அமிர்த மாகவே பார்க்கப்படுகிறது.

  1. புளி சாதம்

நாம் வெளியூர் செல்லும்போது பலர் தங்களது வீட்டில் இருந்து புளி சாதத்தை சாப்பிட கொண்டு வருவதை பார்த்திருப்போம். பல உணவு வகைகள் சீக்கிரம் கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது, ஆனால் புளிசாதம் அவ்வளவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாது, இது அதில் உள்ள புளியின் இயற்கை தன்மையாகும். மேலும் இது ஒரு சுவையான உணவாகவும் பார்க்கப்படுகின்றது. பல உணவுப் பிரியர்களின் பட்டியலில் இது கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

  1. பருப்பு பாயாசம்

ஒரு பாரம்பரிய பாயாச வகை. பாசிப்பருப்பு, கருப்பட்டி, தேங்காய்ப்பால், நெய் மற்றும் மேலும் சில பருப்பு வகைகள் போன்றவற்றை இந்த பாயாசம் தயாரிக்கப்படுகிறது. இது அனைத்து கல்யாண விருந்துகளிளும் இறுதி உணவாக பரிமாறப்படுகிறது.

  1. பொரித்த நண்டு

கடல் சார்ந்த உணவுகள் பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். தமிழ்நாட்டில் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் பகுதி உள்ளது. நண்டு என்பது பலருக்கும் பிடித்த உணவாக இருக்கும். எனினும் சிலருக்கு அது உடல் உபாதைகள் ஆன வயிற்றுப் போக்கு போன்றவற்றை உருவாக்ககூடும். எனினும் இது நம் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் அளிக்கக் கூடிய உணவாகும். தமிழகத்தில் இது பல மக்களால் உண்ணக் கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் காரசாரமான மசாலா கலவையுடன் சாப்பிட்டால் நல்ல ஒரு சுவையை கொடுக்கும்.

  1. ரசம்

அனைவரும் உணவு உண்டபின் ரசம் பருகுவதை அல்லது ரசம் சாதம் சாப்பிடுவதை பார்த்திருக்கிறோம். இது மிகுந்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவாகும். இது ஜீரண சக்தி மிகுந்த உணவாகும். இது இவ்வுலகிற்கு தமிழன் கொடுத்த ஒரு உன்னத உணவாகும்.

6. மட்டன் கோலா உருண்டை

மட்டன் நம் உணவு வகைகளில் முதலிடத்தை பிடிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அசைவ பிரியர்கள் பலரும் மட்டனை விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்கு மட்டன் கோலா உருண்டை பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இது மட்டனை நன்றாக அரைத்து அதனை உருண்டை பிடித்து நன்றாகப் பொரித்து கொடுக்கப்படும் உணவாகும். இதனை செய்து நீங்கள் சாப்பிட்டால் நவரசமான ருசி உங்கள் நாக்கில் தாண்டவமாடும். இதை நீங்கள் கண்டிப்பாக முயற்சித்து பார்க்க வேண்டும்.

  1. செட்டிநாடு சிக்கன்

இந்தப் பெயரை சொன்னாலே உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில் செட்டிநாடு சிக்கன் மிகுந்த சுவை மிகுந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. தயிரில் சிறிது மஞ்சள் தூளை இட்டு அதில் சிக்கனை நன்றாக பிரட்டி கடுகு, கொத்தமல்லி, கருவேப்பிள்ளை மற்றும் இன்னும் சில பொருட்களை போட்டு செய்வதுதான் இந்த செட்டிநாடு சிக்கன் ஆகும்.

  1. பில்டர் காபி

பில்டர் காபி என்றாலே உங்கள் மாலை நேர தருணங்கள் தான் உங்களுக்கு ஞாபகம் வரும். இது ஒரு பாரம்பரியம் மிக்க ஒரு தென்னிந்திய காபி வகையாகவே பார்க்கப்படுகிறது. பில்டர் காபி ஆனது வெள்ளி அல்லது இரும்பு டம்ளரில் கொடுக்கப்படுகிறது. உருண்டை வடிவிலான மற்றொரு சிறிய பாத்திரம் அந்த டம்ளருடன் கொடுக்கப்படுகிறது, அதன் மூலம் நாம் காப்பியை ஆற்றி குடிக்க முடியும். நீங்கள் இதைப் படித்த பின்பு, இந்நேரம் காபி குடிக்க கிளம்பி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  1. பொங்கல்

பண்டிகை காலத்தில் மாத்திரமே கொடுக்கப்படும் என்று நினைத்த ஒரு உணவு தான் பொங்கல். பொங்கல் பண்டிகையின் போது அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவர். இதன் சுவையினால் என்னவோ பலரும் இதனை தினசரி காலை உணவாகவே சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். மிளகு பொங்கல், சர்க்கரைப் பொங்கல் போன்ற இருவகை தொங்கல்கள் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். வெண்பொங்கல் மற்றும் புளி பொங்கலும் கூடுதல் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இதுவும் நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டிய உணவுகளின் பட்டியலில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

  1. முறுக்கு

சிற்றுண்டி பிரியர்கள் அனைவருக்கும் முழுக்க பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். நீங்கள் உங்களது காபி குடிக்கும் நேரத்தில் முறுக்கு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டவர் என்றால் அதன் சுவை பற்றி உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இந்த முருகன் அது பலவகைகளில் காணப்படுகிறது, அரிசி முறுக்கு, அச்சு முறுக்கு என பலவகை முறுக்குகள் மொறுமொறுப்பாக அனைவருக்கும் கிடைக்கின்றன. இனிப்பு, இறைச்சி மற்றும் கடல் சார்ந்த இறைச்சி சார்ந்த நூல்களும் உள்ளன. ஆக நீங்கள் அந்த வகை முறைகளையும் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.

நீங்கள் அனைவரும் இந்த உணவு வகைகள் குறித்து இங்கே கொடுத்திருந்த காரியங்களை படித்து மகிழ்ந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். நீங்கள் தொடர்ந்து உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கொடுத்திடுங்கள்.