வாங்கி கடன் தள்ளுபடி!! முதல்வர் அதிரடி அறிவிப்பு

வாங்கி கடன் தள்ளுபடி!! முதல்வர் அதிரடி அறிவிப்பு

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12,100 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 16.4 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர், விதி எண் 110’ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா காலகட்டத்தில் பல ஏழை எளிய விவசாயிகள் பாதிக்கப்பட்டு கடன்சுமை தாங்க முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான செய்தி முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடன் வாங்கி விவசாயம் செய்து பாதிக்கப்பட்ட பல விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.