Tea குடித்தால் ஆபத்தா?

Tea குடித்தால் ஆபத்தா?

தேநீர் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. தினமும் நம்மில் பலர், பல நேரங்களில் தேநீர் குடிப்பது உண்டு. எனினும் தேனீரை நாம் எந்த நேரத்தில் குடிக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். ஒவ்வொருவரும் பல நேரங்களில் பலமுறை தேநீரை தினசரி உட்கொள்வது உண்டு. இப்படி நாம் இப்படிக்கு மிந்த தேனீர் நன்மையானது தானா? இதனை நாம் கண்ட நேரத்தில் குடிப்பது சரிதானா? ஒரு நாளைக்கு எவ்வளவு முறை தேநீர் குடித்தல் நல்லது? இவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

நன்மைகள்:

1) புத்துணர்வை அளித்திடும்

தேநீரில் உள்ள கேபைன் என்ற வேதிப்பொருள், நமக்கு புத்துணர்வூட்டுகிறது. இது மக்களுக்கு சற்று நிம்மதி அள்ளிக்கு ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் பலருக்கும் இது நல்ல ஒரு புத்துணர்வை அளித்து நம்மை நாள் முழுவது. களைப்படையாமல் பார்த்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

2) தூக்கம் வராமல் தொடர்ந்து வேலை செய்ய உதவிடும்

படிக்கும் மாணவர்கள் இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள். என பலரும் தாங்கள் தூக்கம் வராமல் தொடர்ந்து தங்கள் பணியை செய்திட தேனீரை பருகுகின்றனர். இப்படி பலருக்கும் தங்களுடைய படிப்பு மற்றும் வேலை விஷயங்களில் தொடர்ந்து செயல்பட இந்த தேநீர் ஆனது உதவி இருக்கிறது. தூக்கம் வராமல் சின்னம்மை காத்திட தேநீரில் உள்ள கேபைன் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அடினோசைன் என்ற தூக்கத்தை வரவைக்கும் வேதிப்பொருளினை அதிகம் உருவாக விடாமல் நமக்கு புத்துணர்வை தொடர்ந்து அளித்திட தேநீரில் உள்ள கேபைன் உதவுகிறது.

எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை:

1) தூக்கத்தை தொலைக்க நேரிடலாம்

சிலர் ஒரு நாளைக்கு பலமுறை தேனீர் அருந்தும் பழக்கம் உடையவராக இருக்கலாம். அப்படி இருப்பவர்கள் கண்டிப்பாக சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில், நாம் அளவுக்கு அதிகமாக தேநீர் பருகினால் அது காலப்போக்கில் நமது தூக்கத்தை பாதிக்கும் ஒன்றாக மாற அதிக வாய்ப்பிருக்கிறது.

2) தூக்கமின்மையால் பல பாதிப்பு ஏற்படலாம்

நாம் தேநீரை தொடர்ந்து பருகிவரும் பட்சத்தில், தூக்கமின்மை ஏற்படும் என்பதை பார்த்தோம், ஆனால் இது தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் நமக்கு மேலும் அதிக உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கேபைன் வேதிப்பொருள் அதிகம் நம் உடலில் தேநீர் மூலம் செல்வதால் இன்னும் நமக்கு தூக்கம் வர உதவும் அடினோசைன் சுரப்பதை குறைத்து இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துகிறது.

தூக்காமல் இருப்பதால் நமக்கு ரத்த சோகை ஏற்படும் அபாயம் உள்ளது.

3) இது தான் தேநீர் பருக சரியான அளவு

நாம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 – 4 கப் தேநீர் குடிக்கலாம். ஆனால் இந்த அளவை தாண்டினால் அது நமக்கு நல்லதல்ல. இப்படி தொடர்ந்து பருகினால் பெரியளவில் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை நோய் நம்மை பாதிக்க கூடும்.

4) ரத்த சிவப்பணுக்கள் குறையும்

தேநீரில் டானின்ஸ் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் நாம் அதிகமாக தேநீர் குடித்தால் நமது வயிற்று பகுதிக்கு அதிகமாக சென்றிடும் வாய்ப்பிருக்கிறது. இந்த வேதிப்பொருள் நம் வயிற்றுக்குள் அதிகம் சென்றால், நமது ஜீரண உறுப்பில் சில பாதிப்பை ஏற்படுத்தும். நம் உணவில் உள்ள இரும்பு சத்தினை செரிமானம் செய்து நமது உடலுக்கு கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் நமது ரத்த சிவப்பு அணுக்கள் குறைந்திடும். இது பெரிதளவில் மக்களுக்கு ரத்த சோகை உருவாக காரணமாக விளங்குகிறது.

5) வயிற்று புண் ஏற்படலாம்

நம்மில் சிலருக்கு காலை எழுந்தவுடன் தேநீர் குடிக்கும் பழக்கம் இருக்கலாம். நமது வயிற்றில் நாம் இரவு முழுவது எதுவும் சாப்பிடவில்லை என்பதால் அதிக அளவில் ஆசிட் உருவாகி இருக்கும். இப்படி இருக்க நாம் மேலும் சூடு நிறைந்த தேநீரை குடிப்பது நல்லதல்ல. அதற்கு பதில் நாம், ஓர் கிளாஸ் தண்ணீர் பருகிய பின்னர் தேநீர் குடிப்பது நல்லது.

இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் கண்டிப்பாக தேநீர் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை தெரிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறோம். உங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்திட அளவாக தேநீர் பருகி நலமுடன் வாழ்த்திடுவோம்.