உத்தரகண்டில் நிலச்சரிவு! 100+ பேர் பலி?

உத்தரகண்டில் நிலச்சரிவு! 100+ பேர் பலி?

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள அலோக்நந்தா மற்றும் தவுளிகங்கா ஆறுகளுக்கு அருகில் உள்ள பனிப்பாறை ஒன்று வெடித்து உருண்டு வந்து இந்த ஆறுகளில் விழுந்ததில் காரணமாக அந்த ஆறுகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான தகவலின்படி சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருப்பதாகவும் தெரிகிறது.

மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள் முழுவீச்சில் தங்களது பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், மீட்புப்பணிகளுக்காக விமானப்படை தனது டெஹ்ராடூனில் விமானப்படை தளத்தில் இருந்து Mi-17 மற்றும் ALH துருவ் ரக ஹெலிகாப்டர்கள் அனுப்பியுள்ளது.

வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து உத்தரகண்ட் முதல்வர் ராவத்தை தொடர்புகொண்டு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.