கதறி அழுத வடிவேலு – காரணம் இது தான்

கதறி அழுத வடிவேலு – காரணம் இது தான்

நடிகர் வடிவேலு என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது காமெடி தான். அவரது காமெடியில் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

திரையுலகினர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்து இருக்கும் ஒரு வாட்ஸ் ஆப் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார், அதில் அவர் மிகவும் உருக்கமாக பேசினார்.

அதில் பேசிய அவர் நீங்கள் அனைவரும் கடந்த 1 வருடமாக தான் லாக் டவுனில் இருக்கிறீர்கள் ஆனால் நான் கடந்த 10 வருடமாக வீட்டில் லாக் டவுனில் தான் இருக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக பேசினார்.

இப்போது எனக்கு நடிக்க உடம்பில் தெம்பும் மிகுந்த ஆசையாகவும் உள்ளது அனால் யாரும் வாய்ப்பு தான் தர முன்வருவதில்லை. இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.