‘தளபதி 66’ திடீர் ட்ரெண்டாகும் இயக்குனர் அட்லீ

‘தளபதி 66’ திடீர் ட்ரெண்டாகும் இயக்குனர் அட்லீ

இன்று காலை முதலே இயக்குனர் அட்லீ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார். அனைவருக்கு இது மிக பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கான காரணத்தை ஆராய்ந்தது பார்த்தல் அதில் நடிகர் விஜய் வருகிறார் என்பது கூடுதல் ஆர்வத்தை கொடுக்கிறது.

தளபதி 65 படத்தை தற்போது நெல்சன் இயக்க உள்ளார் என்பது அதனை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதும் நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது மாஸ்டர் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தளபதி 65 படத்தை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 66 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாகவும் அதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாகவே இயக்குனர் அட்லீ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார்.

ஆனால் இயக்குனர் அட்லீ ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் தளபதி 66 படத்தை இயக்குவது சற்று கடினமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தளபதி 66’ படத்தை இயக்குவதில் லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், அஜய் ஞானமுத்து, வெற்றிமாறன், மகிழ் திருமேனி ஆகியோர்கள் ரெடியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.