குட்டி ஸ்டோரியில் இணையும் விஜய்சேதுபதி – அமலா பால்

குட்டி ஸ்டோரியில் இணையும் விஜய்சேதுபதி – அமலா பால்

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ என்ற ஆந்தாலஜி படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் பல ஆந்தாலஜி படங்கள் வெளியான வண்ணம் உள்ளன. ‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’ போன்ற படங்களை தொடர்ந்து வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழின் முன்னணி இயக்குநர்களான நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு, கெளதம் மேனன், ஏ.எல் விஜய் ஆகியோர் இனைந்து இயக்கியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்ற திரை[படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன்பு இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்த நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கெளதம் மேனன், ஒல்லியாக காட்சியளிக்கும் விஜய் சேதுபதி, ‘உனக்கு என்னை பிடிக்குமா? உன் பொண்டாட்டியை பிடிக்குமா? என்று மிரட்டல் கேள்வி கேட்கும் அதிதீ பாலன், காதலில் உருகும் மேகா ஆகாஷ், சாக்‌ஷி அகர்வால் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தாலும் அனைவரின் கண்களும் விஜய் சேதுபதி மற்றும் அமலா பாலும் மீது தான் போகிறது. இப்படத்தில் வரும் நான்கு காதல் கதைகளும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டவை.

இப்படத்தில் அமலாபால், விஜய் சேதுபதி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் நலன் குமாரசாமியின் படங்களான ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்துபோகும்’ உள்ளிட்டவற்றில் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்துள்ளநிலையில், மூன்றாவது முறையாக இக்கூட்டணி கைகோர்த்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று எகிர்ந்துள்ளது.