ஒரு வாரத்தில் உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவை

ஒரு வாரத்தில் உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவை

இன்றைய கால கட்டங்களில் உள்ள இளைஞர்கள் தங்களது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக மாங்கு மாங்கு என ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதை பார்த்து இருக்கிறோம். ஆனால் இயற்கையான முறையில் உடல் எடையை குறைத்து உடல் பருமனால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும் என்பது பலருக்கும் அதை எடுத்துச் சொல்வதற்கு தான் இந்த பதிவு.

கொள்ளு டீ

cup of tea – low DOF

கொள்ளு எடுத்து முதலில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் கொடம்புளி இரண்டு துண்டுகள் எடுத்து ஊறவைத்துவிட்டு அதே தண்ணீரில் குறைந்தது இரண்டு டீ ஸ்பூன் கொள்ளு பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். கொதித்த பின்னர் வடிகட்டி எடுத்து தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

நடைப்பயிற்சி (Walking)

தினமும் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை காட்டிலும் குறைந்த நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் உடல் எடை தானாக குறைந்துவிடும் என்கிறது மருத்துவம். அதுவும் ஒரே வாரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியுமாம்.

வாழைத்தண்டு ஜூஸ்

இந்த காலகட்டங்களில் பல இளைஞர்களுக்கு வாழைத்தண்டு என்ன என்று கேட்டாலே தெரியாது. கிராமப்புற ஆட்களுக்கு மட்டுமே அதிகம் தெரியும். அப்படிப்பட்ட வாழைத்தண்டு நம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. வாழைத்தண்டு ஜூஸ் போட்டு உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் பிரச்சினை ஏற்படுவது இருக்காது. மேலும் உடலில் தேவையற்ற கொழுப்புகளும் நீங்கும்.

மந்தாரை வேர்

இதை அனைவருமே கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மந்தாரை வேரை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதை பாதியாக சுண்ட விட்டு வடிகட்டி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

அருகம்புல் ஜூஸ்

உடல் எடையை குறைக்கும் வழிகளில் அருகம்புல் ஜூஸ் குடிக்கும் முறை மிகவும் முக்கியமானது. இதை தினமும் குடித்து வந்தால் உடல் எடையை அதுவாகவே குறைத்துவிடும்.

உணவில் வெங்காயம் பூண்டு சேர்த்துக் கொள்ளுதல்

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது உணவில் இருக்கும் வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுவதையே வேலையாக வைத்துள்ளனர். ஆனால் அவற்றை சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை குறைய வாய்ப்பு இருக்கிறது.

எலுமிச்சை சாறு, பப்பாளி

தினமும் டீ காபி பால் போன்றவற்றிற்கு எதிராக எலுமிச்சை சாறு குடித்து வந்தால் உடல் எடை குறையும். அதேபோல் பப்பாளியை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாக காணப்படும்.

சோம்பு தண்ணீர்

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் சோம்பு கலந்த நீரை பருகி வந்தால் உடல் எடை குறைந்து மெலிந்து பார்ப்பதற்கு அழகான தோற்றம் தரும்.